‘கலகலப்பு’ படத்தில் படு கிளாமராக நடித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார் அஞ்சலி.
வரும் சில வாரங்கள் அஞ்சலி வாரம் என்றால் அதில் அதிசயம் ஒன்றுமில்லை. அஞ்சலி நடித்த ‘வத்திக்குச்சி’, ‘சேட்டை’, ‘மத கஜ ராஜா’ ஆகிய படங்கள் தொடர்ச்சியாக வெளிவர இருக்கின்றன.
இவற்றில் சேட்டை, மத கஜ ராஜா படங்களில் அஞ்சலியின் நடிப்போடு கிளாமரும் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், அஞ்சலியே எனக்கு யாருடனும் கிளாமரில் போட்டி இல்லை, நடிப்பில்தான் போட்டி என்கிறார்.
‘சேட்டை’ படத்தில் ஹன்சிகாவுடனும், ‘மத கஜ ராஜா’ படத்தில் வரு சரத்குமாருடனும் அஞ்சலி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.