தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் காஜல் அகர்வால். ‘துப்பாக்கி’ படத்தின் வெற்றியின் மூலம் மீண்டும் விஜய்யுடன் நடிக்கப் போகிறார். தற்போது கார்த்தியுடன் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தில் நடித்து வருகிறார்.
ஆனால், தெலுங்கில் இவருக்கு இப்போது சரியான போட்டியாக வந்திருப்பவர் ஸ்ருதி ஹாசன். சமந்தாவும் போட்டியில் இருந்தாலும் அவர் அதிகமாக கிளாமராக நடிப்பதில்லை.
கிளாமராக நடிப்பதில் காஜலுக்கும், ஸ்ருதிக்கும் இடையில்தான் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்த போட்டி, சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற சிசிஎல் போட்டியில் வெளிப்படையாகத் தெரிந்தது. இந்த போட்டியைப் பார்ப்பதற்காக காஜல், ஸ்ருதி, லட்சுமிராய், பாவனா, மற்றும் பலர் வந்திருந்தனர்.
ஆனால், காஜல், ஸ்ருதி ஹாசன் இருந்த பக்கம் திரும்பிப் பார்க்கவேயில்லை. அவருடைய ‘டேப்’ஐ மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார்.
இதன் மூலம், ஸ்ருதி மீது காஜல் கொண்டுள்ள பொறாமை வெட்ட வெளிச்சமாகியுள்ளது என பேசிக் கொள்கிறார்கள்.