‘அட்ட கத்தி’, ‘பீட்சா’, ஆகிய வெற்றிப் படங்களைத் தயாரித்த திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தற்போது ‘சூது கவ்வும்’ படத்தைத் தயாரித்து வருகிறது.
இதற்கடுத்து ‘பீட்சா 2 – தி வில்லா’ படத்தைத் தயாரிக்க இருக்கிறார்கள்.
இந்த படத்தை இயக்கவும் ஒரு புதுமுக இயக்குனருக்கு வாய்ப்பளித்துள்ளார் தயாரிப்பாளர் சி.வி. குமரன்.
குறும் பட இயக்குனர் தீபன் சக்கரவர்த்தி என்பவரை இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்துகிறார்.
வைபவ், சஞ்சிதா ஷெட்டி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மற்ற நடிக, நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
அடுத்த மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.