400 கோடிக்கு கையெழுத்திட்ட ஹீரோ…!

ajay-devganஹிந்தி நடிகரும் , நடிகை கஜோல்-ன் காதல் கணவருமான அஜய் தேவ்கன் 400 கோடி ரூபாய்க்கு ஸ்டார் இந்தியா உடன் ஒப்பந்தந்தில் கையெழுத்திட்டிருக்கிறார் என்று மும்பையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2017ம் ஆண்டு வரை போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் மூலம், அஜய் தேவகன் நடித்து வெளிவரும் படங்களை அனைத்தும் ஸ்டார் இந்தியா நெட் வொர்க்கில் மட்டுமே ஒளிபரப்பாகும்.

அஜய் தேவகன் நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘போல் பச்சன்’, ‘சன் ஆப் சர்தார்’ ஆகிய படங்கள் 100 கோடிக்கும் மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே, சல்மான் கான், அமீர் கான், ஷாரூக் கான் போன்றோரின் படங்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பும், வசூலும் கிடைத்து வருவதால் அவர்கள் ஏற்கெனவே இம்மாதிரியான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்களில்  கையெழுத்திட்டுள்ளனர்.

இப்போது அஜய் தேவகனும் அவர்களது வரிசையில் சேர்ந்துள்ளார்.

Read Previous

விரைவில் ‘பீட்சா 2’ ஆரம்பம்

Read Next

வசந்த மாளிகை – சிறப்பு கண்ணோட்டம்

Most Popular