வடிவேலு ஹீரோ – இயக்கம் கே.எஸ். ரவிகுமார்

vadivelu-ks-ravikumarஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், சரத்குமார், போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களை இயக்கிய கே.எஸ். ரவிகுமார், அடுத்து காமெடி நடிப்பில் உச்சம் தொட்ட வடிவேலு நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார்.

ரஜினிகாந்த் பற்றிய பயோகிராஃபி எழுதிய காயத்ரி என்பவர் ஒரு கதையை எழுதி, அதை இயக்குனர் கே.எஸ். ரவிகுமாரிடமும், வடிவேலுவிடமும் சொல்லியிருக்கிறார். இருவருக்குமே அந்த கதை பிடித்துப் போயிருக்கிறது.

வடிவேலுவே கே.எஸ். ரவிகுமாரைச் சந்தித்து தனக்காக அந்த படத்தை இயக்கியத் தருமாறு கேட்டிருக்கிறார். கே.எஸ். ரவிகுமாரும் அதற்கு சம்மதித்திருக்கிறார்.

மிகவும் பிரம்மாண்டமாகத் தயாரிக்க வேண்டிய படமாம், சினிமாவை சினிமாவாக நேசிக்கக் கூடிய தயாரிப்பாளர்களுக்காக காத்திருக்கிறார்கள்.

அப்படி ஒருவர் விரைவில் கிடைத்து விட்டால், தமிழ் சினிமாவில் பட்டையைக் கிளப்பக் கூடிய ஒரு படத்தை கொடுத்து விடலாம் என்கிறார் இயக்குனர் கே.எஸ். ரவிகுமார்.

சீக்கிரம் நல்ல செய்தி சொல்லுங்க….ரசிக்கிறதுக்கு நாங்க காத்திருக்கிறோம்.

Read Previous

பதவி – விமர்சனம்

Read Next

நான் சந்திரபாபு மாதிரி… – பவர் ஸ்டார்

Most Popular