நான் சந்திரபாபு மாதிரி… – பவர் ஸ்டார்

azhagan azhagi shooting_00012ப்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க (?) முடியாத நடிகராகி விட்டார் பவர் ஸ்டார். தற்போது பல படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடி பல படங்களின் ‘பப்ளிசிட்டி’க்காக பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்.

நாளை வெளியாக உள்ள ‘ஒன்பதுல குரு’ படத்தில் ஆரம்பமான இவரின் ஒரு பாடல் நடனம், தொடர்ந்து ‘சும்மா நச்சுனு இருக்கு‘, ‘அழகன் அழகி’ ஆகிய படங்களிலும் தொடர்ந்துள்ளது.

இதில் ‘அழகன் அழகி’யின் ‘டெரல் லவ் ஆன்தம்’ பாடல் யு டியூப்பில் வெளியிடப்பட்டு பல்லாரயிக்கணக்கானவர்களால் பார்க்கப்பட்டுள்ளது.

இப்படி ஒரு பாடலுக்கு நடமாடுகிறீர்களே என்று கேட்டதற்கு, “ சாப்பாட்டுல எத்தனை வகை இருந்தாலும், ஊறுகாய் இருந்தால் அதோட ருசியே தனி. அந்த ஊறுகாய் இப்ப நான்தான். தமிழ் சினிமால சந்திரபாபுக்குப் பிறகு  ஒரு பாட்டுக்கு ஆடற ஆண் நடிகர் நான் மட்டும்தான். இது பெருமையாதான் இருக்கு. யார் கூப்பிட்டாலும் ஒரு பாட்டுக்கு நான் ஆடி ரெடி,” என டெரராக பதிலளித்திருக்கிறார் பவர் ஸ்டார்.

Read Previous

வடிவேலு ஹீரோ – இயக்கம் கே.எஸ். ரவிகுமார்

Read Next

சந்தானம் ஜோடியாக ஹிந்தி நடிகை ?

Most Popular