சந்தானம் ஜோடியாக ஹிந்தி நடிகை ?

geetha-basra‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் வெற்றி சந்தானத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போயிருக்கிறது.

தொடர்ந்து பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும், அடுத்ததாக தெலுங்கில் ராஜமௌலி இயக்கி வெற்றி பெற்ற ‘மரியாதை ராமண்ணா’ படத்தின் ரீமேக்கில் விரைவில் நாயகனாக நடிக்க உள்ளார்.

சில படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவரும், ‘முத்திரை’ படத்தை இயக்கி ஸ்ரீநாத் இந்த படத்தை இயக்கவிருக்கிறார்.

இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க ஹிந்தி நடிகையான கீதா பாஸ்ராவிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவர் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் தோழி என்பது குறிப்பிடத்க்கது.

கீதா பாஸ்ரா இதுவரை எந்த தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்ததில்லை, சந்தானத்துடன் நடிக்க ஆவலாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இன்னும் பேச்சு வார்த்தை முடியவில்லையாம்.

சந்தானமும், கீதா பாஸ்ராவும் விரைவில் சந்தித்துப் பேச உள்ளார்கள். சந்தானம் இந்த படத்தை பிவிபி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க உள்ளார். இந்த சந்திப்பு முடிந்தவுடன் விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்.

 

Read Previous

நான் சந்திரபாபு மாதிரி… – பவர் ஸ்டார்

Read Next

போலிகளைக் கண்டு ஏமாறாதீர் – சசிகுமார் வேண்டுகோள்