நடிகை அஞ்சலி ‘ஊர் சுற்றி புராணம்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு ‘கரன்ட் ஷாக்’ அடித்து விபத்து ஏற்பட்டது.
களஞ்சியம் இயக்கி நாயகனாக நடிக்கும் படம் ‘ஊர் சுற்றி புராணம்’. இந்த படத்தின் நாயகியாக அஞ்சலி நடித்து வருகிறார். ‘கருங்காலி’ படத்திற்குப் பிறகு இந்த ஜோடி மீண்டும் இணைந்து நடிக்கும் படம் இது.
இந்த படத்தின் படப்பிடிப்பு திருப்போரூருக்கு அருகில் நடந்து வருகிறது. படப்பிடிப்புத் தளத்தில் மின்சாரம் தாக்கி அஞ்சலி தூக்கி வீசப்பட்டார். உடனடியாக முதலுதவி அளித்து அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
இதனால் படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டது.