‘இலக்கியச் சிந்தனை’ விருது பெறும் வைரமுத்துவின் ‘மூன்றாம் உலகப் போர்’

vairamuthu-ilakkiya-sinthanaiகவிஞர் வைரமுத்து   எழுதிய ‘மூன்றாம் உலகப் போர்’ 2012ம் ஆண்டு வெளிவந்த நாவல்களுள் சிறந்த நாவல் என்ற இலக்கியச் சிந்தனை அமைப்பின் விருதினைப் பெறுகிறது.

43 ஆண்டுகளாக இயங்கி வரும் அமைப்பான ‘இலக்கியச் சிந்தனை’ இதுவரை ஜெயகாந்தன், தி. ஜானகிராமன், அசோகமித்திரன், ராஜம் கிருஷ்ணன், சின்னப்ப பாரதி, பாலகுமாரன், வண்ண நிலவன் போன்ற படைப்பாளிகளுக்கு இலக்கியச் சிந்தனை விருதை வழங்கியிருக்கிறது.

தமிழில் வெளிவந்த படைப்புகளில் சிறந்ததை இலக்கியச் சிந்தனை ஒவ்வோர் ஆண்டும் அறிஞர் குழு அமைத்துத் தேர்ந்தெடுக்கிறது.

இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்து எழுதிய மூன்றாம் உலகப் போர் இந்த விருதைப் பெறுகிறது.

வைரமுத்துவின் பழைய படைப்புகளையெல்லாம் தாண்டி மூன்றாம் உலகப் போர் 9 மாதங்களில் 9 பதிப்புகள் கண்டு தமிழ் இலக்கியத் துறையில் இதுவரை யாரும் தொடத ஒரு சாதனைனைய புரிந்திருக்கிறது.

ஏப்ரல் 12ம் தேதி சென்னையில் நடக்கும் விழாவில் இலக்கியச் சிந்தனை விருது கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கப்படுகிறது.

இதற்கான அறிவிப்பை இலக்கியச் சிந்தனை அமைப்பின் நிர்வாக அறங்காவலர் ப. லட்சுமணன் அறிவித்தார்.

இந்த விருது குறித்து கவிஞர் வைரமுத்து கூறுகையில்,“ மூன்றாம் உலகப் போர் என்ற என் படைப்பு ‘இலக்கியச் சிந்தனை’ விருது பெறுவது மகிழ்வு தருகிறது.

ஒரு நல்ல விருது என்பதை எல்லாப் படைப்புகளுக்கும் வழங்கி விட முடியாது. அதைப் போலவே ஒரு நல்ல படைப்பாளி என்பவனால் எல்லா விருதுகளையும் ஏற்றுக் கொள்ளவும் முடியாது.  அமைப்பின் பெருமை கருதி இந்த விருதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

இலக்கியச் சிந்தனை சமசரமற்ற அமைப்பு என்பது போலவே எனது படைப்பும் சமரசமற்றது. மூன்று வருட ஆராய்ச்சிக்குப் பிறகு பத்து மாதங்களில் படைக்கப்பட்டது.

ஏப்ரல் 12ம் நாள் இலக்கியச் சிந்தனை விருது வழங்கப்படும் மேடையில் ஒரு படைப்பாளியாய் , ஓர் எளிய சமூகக் கடமையை ஆற்றவிருக்கிறேன்.

பயிர் கருகியது கண்டு உயிர் மாய்த்துக் கொண்ட காவிரி டெல்டா விவசாயிகளின் குடும்பங்களுக்கு மூன்றாம் உலகப் போர் எழுதி ஈட்டிய ஊதியத்தின் பெரும் பகுதியை பகிர்ந்து அளிக்கவிருக்கிறேன்.

ஒரு குடும்பத்துக்கு ஒரு லட்சம் வீதும் 11 குடும்பங்களுக்கு 11 லட்சம் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்கொலைக்கு ஆளான விவசாயக் குடும்பங்களுக்கு பல தளங்களில் பல உதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. எழுத்துலகத்திக் கடமையாக என் பங்கையும் இணைத்துக் கொள்கிறேன்,” என்று கூறினார்.

Read Previous

‘ரெண்டாவது படம்’ – கதை இருக்கா , இல்லையா ?

Read Next

அஞ்சலிக்கு ‘ஷாக்’…