‘பூலோகம்’ ஜெயம் ரவியின் மிரட்டலான நடிப்பு…

boologam_00013ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘பூலோகம்’. ஜெயம் ரவி, த்ரிஷா மற்றும் பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ஆரம்பமாகி தற்போது முடியும் நிலையில் உள்ளது.

வட சென்னையை கதைக் களமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் படம் இது. இப்படத்திற்காக சென்னை மாநகரத்தில் அழிந்து விடாமல் இருக்கும் சில குல வழக்கங்களை மையமாகக் கொண்டு சில காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டன.

அதில் தமிழகத்தில் கொண்டாடப்படும் தமிழனத்தின் பிரத்யேகமான குல வழக்கமான ‘மயான கொள்ளை’ காட்சிகளும் அடங்கியுள்ளன. இவற்றை வட சென்னையின் உட் பகுதிகளில் படமாக்கினர்.

இக்காட்சிகள் படமாக்கப்படும் போது நாயகன் ஜெயம் ரவியின் மிரட்டலான, ஆக்ரோஷமான நடிப்பைப் பார்த்த போது கூடியிருந்த ரசிகர்கள் பக்திப் பரவசத்துடன் குரல் எழுப்பினார்கள். அப்போது இது படப்பிடிப்பா அல்லது நிஜமான ஒன்றா என்று தெரியாத அளவுக்கு மிகவும் இயல்பாக அமைந்தது.

ஜெயம் ரவியின் ஒப்பனையும், உடையும், அவருடைய தோற்றமும் ,  நடிப்பும் காட்சிக்குப் மிகப் பொருத்தமாக உக்கிரமாக அமைந்தது பெண்களை மிகவும் கவரும் என்கிறார் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன்.

Read Previous

அஞ்சலிக்கு ‘ஷாக்’…

Read Next

ஹீரோயின் வயதை சொன்ன இயக்குனர்…