‘வல்லினம்’ படத்தின் இசை வெளியீடு, டிரைலர் வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது.
‘ஈரம்’ படத்திற்குப் பிறகு அறிவழகன் இயக்கும் படம் இது. தமன் இசையமைக்கிறார்.நகுல் நாயகனாகவும் புதுமுகம் மிருதுளா நாயகியாகவும் நடிக்கிறார்கள்.
‘கூடைப்பந்து’ விளையாட்டை மையப்படுத்திய ஒரு கல்லூரிக் கதை.
படத்தின் நாயகி மிருதுளாவை அறிமுகப்படுத்தி பேசிய இயக்குனர் “இந்த படத்துல ஹீரோயினா அறிமுகமாகிற மிருதுளா பெங்களூரைச் சேர்ந்த தமிழ்ப் பெண். அவங்களுக்கு வயசு 20தான். இதுல 17 வருஷமா அவங்க ஒரு கிளாசிகல் டான்சரா இருக்காங்க. நிறைய பேரைப் பார்த்து அப்புறமா இவங்கள செலக்ட் பண்ணோம்,” என்றார்.
இப்படி ஹீரோயின் வயதை அனைவர் முன்னிலையிலும் சொல்லி இயக்குனர் அறிவழகன் ஏற்படுத்திய அதிர்ச்சியை விட, தொடர்ந்து பேசிய மிருதுளா அனைவரையும் ‘அண்ணா’ என அழைத்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
ம்ம்..அழகான பெண்கள் ‘அண்ணா’ என்றாலும் ரசிக்கத்தானே வேண்டும்.