‘பீட்சா – 2’ படத்தை இணைந்து தயாரிக்கும் ஸ்டுடியோ க்ரீன்

pizza-2-the-villaஸ்டுடியோ க்ரீன் நிறுவனம்,  திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் சி.வி. குமார் தயாரித்து வரும் ‘பீட்சா – 2 – தி வில்லா’ படத்தை இணைந்து தயாரிக்கிறது.

‘பீட்சா’  படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகமாக உருவாகவிருக்கும் படம் இது. இந்த படத்தை தீபன் சக்ரவர்த்தி இயக்க, வைபவ், சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார்கள்.

திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் முதன் முதலில்  தயாரித்த  ‘அட்டகத்தி’ படத்தையும் ஸ்டுடியோ க்ரீன் வாங்கி வெளியிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் கதையைக் கேட்டவுடன் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா இந்த படத்தை இணைந்து தயாரிக்க முடிவெடுத்துவிட்டார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது.

Read Previous

விமல், ராஜ்கிரண் நடிக்கும் ‘மஞ்சப்பை’

Read Next

இசை என்றால் இளையராஜாதான் – பால்கி