இசை என்றால் இளையராஜாதான் – பால்கி

1அமிதாப் பச்சன் நடித்த ‘சீனிகம்’, ‘பா’ ஹிந்திப் படங்களை இயக்கிய பால்கி விரைவில் அடுத்த ஹிந்திப் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார்.

இளையராஜாவின் தீவிர ரசிகரான பால்கியின் முதல் இரண்டு படங்களுக்கும் இசையமைத்தவர் இளையராஜதான். சீனிகம், பா , படத்தின் பாடல்கள் ஹிந்தியில் மிகவும் ஹிட்டானவை. அடுத்த படத்திற்கும் இளையராஜதான் இசை என்கிறார் பால்கி.

அது பற்றி பால்கி கூறுகையில், “ என் முந்தைய இரண்டு படங்களுக்கும் இசையமைத்தவர் இளையராஜதான். மீண்டும் அவருடனும் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமுடனும் இணைந்து பணிபுரியப் போவது பெருமையாக இருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை இசை என்றால் இளையராஜதான். என் படங்களுக்கு அவர் இசையமைக்க சம்மதித்தால் நான் மட்டும் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.”

 புதிய படத்தில் யார் யார் நடிக்கப் போகிறார்கள் என இன்னும் முடிவாகவில்லை. தென்னிந்திய நடிகர்கள் யாரும் நடிக்கப் போவதில்லை. ஆனால் ஹிந்தித் திரையுலகின் வசீகரமான நடிகர்கள் நடிக்கப் போகிறார்கள்  ,” என்கிறார் பால்கி.

விரைவில் முறையான அறிவிப்பு வெளியாக உள்ளது.

Read Previous

‘பீட்சா – 2’ படத்தை இணைந்து தயாரிக்கும் ஸ்டுடியோ க்ரீன்

Read Next

6 மாதத்தில் 6 படம்…