6 மாதத்தில் 6 படம்…

i na launch_00024‘லிப்ரா புரொடக்ஷன்ஸ்’ – தமிழ்த் திரையுலகில் சாதிக்க நினைக்கும் பல இளைஞர்களின்  முகவரியாக மாறி வரும் ஒரு நிறுவனம்.

திறமையுள்ள பல புதிய இளைஞர்களுக்கு பெரும் கனவாக இருக்கும் இந்த கனவுத் தொழிற்சாலையின் வாயில்களை அவர்களின் வருகைக்காக ‘லிப்ரா புரொடக்ஷன்ஸ்’ திறந்து வைத்து விட்டார்கள்.

ரவீந்தர் சந்திரசேகரன் என்ற தனி மனிதரின் சினிமா மீதான காதல் 6 மாதங்களுக்குள் 6 படங்களைத் தயாரிக்க வைத்து, இன்னும் பல படங்களைத் தயாரிக்க காத்துக் கொண்டிருக்கிறது.

இன்று இவர்களின் ஆறாவது படைப்பான  ‘ I – நா ’ படத்தின் துவக்க விழா நடைபெற்றது. லிப்ரா புரொடக்ஷன்ஸ் – ரவீந்தர் சந்திரசேகரன் தயாரித்து , இப்படத்தை இயக்குகிறார்.

சௌந்தரராஜா, கார்த்திக்குமார், மைக்கேல் , ஹரிதா மற்றும் பலர் நடிக்கிறார்கள். கிரிநந்த் இசையமைக்கிறார். இப்படம் ஒரு சர்வதேச படைப்பாக தயாராக இருக்கிறது.

Read Previous

இசை என்றால் இளையராஜாதான் – பால்கி

Read Next

நடிகரான இயக்குனர் வஸந்த் மகன்…