தமிழ், தெலுங்கில் பிஸியாக இருக்கும் அனுஷ்கா தற்போது தமிழில் நடித்து வரும் படங்களை விரைவாக நடித்து முடித்து தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்தப் போகிறார்.
தெலுங்கில் இரண்டு பிரம்மாண்டமான படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதே இதற்குக் காரணம். எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் ‘பாகுபலி’ படத்திலும், குணசேகர் இயக்கத்தில் ‘ராணி ருத்ரமா தேவி’ படத்திலும் சரித்திர நாயகியாக அனுஷ்கா நடிக்கப் போகிறார்.
இந்த படங்களில் தனி கவனம் செலுத்தி நடிக்க தற்போது தமிழில் சூர்யா ஜோடியாக நடித்து வரும் ‘சிங்கம் 2’ படத்தையும், ஆர்யா ஜோடியாக நடித்து வரும் ‘ரெண்டாம் உலகம்’ படத்தையும் ஏப்ரல் மாதத்திற்குள் நடித்து முடித்து, மேற் சொன்ன தெலுங்குப் படங்களில் அனுஷ்கா அதிக கவனம் செலுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டு தெலுங்குப் படங்களுமே சரித்திரப் படம் என்பதால் படப்பிடிப்பு நீண்ட நாட்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே, இன்னும் கொஞ்ச காலத்திற்கு அனுஷ்கா தமிழில் புதுப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு குறைவுதான்…