விக்னேஷ் சிவனின் விருது நயன்தாரா !!

தமிழ்த் திரையுலகின் பரபரப்பாக இருக்கும் ஒரே காதல் ஜோடி நயன்தாரா, விக்னேஷ் சிவன்.

இன்னும் ஊருக்கு தங்களைக் காதலர்கள் என்று சொல்லிக் கொள்ளவில்லையே தவிர, காதலர்கள் செய்யும் அனைத்து சேட்டைகளையும் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

அடிக்கடி வெளிநாட்டு சுற்றுப் பயணம், பலவிதமான செல்பிகள் என திரையுலக ரசிகர்களை அதிகமாகவே பொறாமைப்பட வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சமயம் கிடைக்கும் போதெல்லாம் நயன்தாரா மீதுள்ள தன் காதலை வெளிப்படுத்த விக்னேஷ் சிவன் தயங்கியதில்லை.

விஜய் டிவி நடத்தியி விஜய் விருதுகள் நேற்று சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் நயன்தாராவிற்கு ‘அறம்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைகக்கான விருதும், அபிமான நடிகை விருது என்ற இரண்டு விருதுகளையும் பெற்றார்.

இது பற்றி மகிழ்ச்சியடைந்த விக்னேஷ் சிவன் நயன்தாராவைப் பாராட்டியுள்ளார்.

“உனக்காக பெருமைப்படுகிறேன் நயன்தாரா. உன்னுடைய கடின உழைப்புக்காகவும், நேர்மைக்காகவும் ‘அறம்’ படம் அனைத்து பெருமைகளையும் பெறத் தகுதியானது. அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

என்னுடைய விருதுடன் அவர் பெற்ற விருதுகள்.

மைன்ட் வாய்ஸ் – நாம எப்போ இப்படி அவார்டை வாங்கி இந்த புள்ள கிட்ட கொடுக்கப் போறோமோ” எனவும் பதிவிட்டிருக்கிறார்.

சீக்கிரமா காதலை சொல்லி, சட்டுபுட்டுனு கல்யாணத்தை முடிங்கப்பா…

Read Previous

கடைக்குட்டி சிங்கம் – டீசர்

Read Next

‘காற்றின் மொழி’ இன்று ஆரம்பம்

Most Popular