ராஜேஷ் இயக்கத்தில் தமன் இசையில் கார்த்தி, காஜல் அகர்வால், சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’.
சகுனி, அலெக்ஸ்பாண்டியன் படங்களின் தோல்விக்குப் பிறகு கார்த்தி தற்போது இந்த படத்திலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘பிரியாணி’ படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த இரண்டு படங்களையும் மிகவும் எதிர்பார்த்து வருகிறார் கார்த்தி. அதனால்தான் வழக்கமான ஆக்ஷன் பார்முலாவில் இருந்து விலகி, கொஞ்சம் நகைச்சுவையுடன் களம் இறங்குகிறார்.
சமீபத்திய பத்திரிகை பேட்டி ஒன்றில் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தின் கதை என்ன என்பதை கூறியுள்ளார் படத்தின் இயக்குனர் ராஜேஷ்.
“ஒரு நகரத்தில் வளரும் இளைஞனுக்கும் அவன் அப்பா , அம்மாவுக்கும் இடையிலான பாசம்தான் படத்தின் கதை. காமெடி, காதல், சென்டிமென்ட், போன்ற வழக்கமான ஐட்டங்களும் படத்தில் உண்டு.
காமெடி படம் எடுக்கிறதுதான் என்னோட ஸ்டைல். இந்த படத்துல மத்த படங்கள்ல இல்லாத மாதிரி பாசம், சென்டிமென்ட் எல்லாம் வச்சி புதுசா ட்ரை பண்ணியிருக்கேன்,” என்கிறார் ராஜேஷ்.