கமல்ஹாசன் தயாரித்து , இயக்கி, நடிக்கும் ‘விஸ்வரூபம் 2’ படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று தெரிகிறது.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் ஆரம்பமானது. கடந்த சில நாட்களாக தாய்லாந்து ‘ஏர் பேஸ்’ஸில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.
முதல் பாகம் முற்றிலுமாக அமெரிக்காவில் நடைபெறுவதாக இருந்தது. இரண்டாம் பாகம் இந்தியாவில் நடக்கும் கதையாக இடம் பெறுவதாக உள்ளதாம்.
படத்தை எப்படியும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்து விட வேண்டும் என்று திட்டமிட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம்.
முதல் பாகத்தின் படப்பிடிப்பின் போதே இரண்டாம் பாகத்தின் பல காட்சிகளை கமல்ஹாசன் எடுத்து விட்டார் என்றும் சொல்லப்படுகிறது. அதனால், இரண்டாம் பாகம் ஆகஸ்ட் மாதம் வெளிவருவதற்கும் வாய்ப்புகள் அதிகம்தான்.
இப்படம் வெளியான பின் கமல்ஹாசன் லிங்குசாமி தயாரிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி நடிக்க உள்ளார்.