சான்ஸ் கேட்கிறாரா அமலா பால் ?

amala paulவிஜய் ஜோடியாக ‘தலைவா’ படத்தில் அமலா ஒப்பந்தமாகும் போதே பலரின் புருவங்கள் ஆச்சரியத்தில் நெளிந்தன.

போதாததற்கு தெலுங்கிலும் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி என இந்த ஆண்டின் முன்னணி நட்சத்திரமாக தன்னை மாற்றிக் கொள்வதற்கு அமலா பால் நிறையவே உழைக்கிறாராம்.

அல்லு அர்ஜுன் ஜோடியாக அமலா பால் நடித்துள்ள ‘இத்தராமயிலதோ’ தெலுங்குப் படம் இன்று வெளியாகியுள்ளது.

மேலும், தமிழில் ஜெயம் ரவியுடன் ‘நிமிர்ந்து நில்’ படத்திலும் நடித்து வருகிறார்.

அடுத்ததாக அஜித், சூர்யா, கார்த்தி போன்றோருடன் தமிழிலும், ஜுனியர் என்டிஆர், மகேஷ்பாபு ஆகியோருடன் தெலுங்கிலும் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறாராம்.

இதற்க அவர்களையே நேரடியாக சந்தித்து வாய்ப்பு கேட்பதாக திரையுலக வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

Read Previous

குட்டிப்புலி – விமர்சனம்

Read Next

‘விஸ்வரூபம் 2’ ஆகஸ்ட் வெளியீடு ?