10ம் வகுப்பு தேர்வு 9 மாணவிகள் முதலிடம்

10th-resultத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை பள்ளி மற்றும் தனியார் மூலம் 11 லட்சத்து 19 ஆயிரத்து 478 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். பள்ளிகள் மூலம் மட்டும் 10 லட்சத்து 51 ஆயிரத்து 62 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.

இதில் பள்ளிகள் மூலம் எழுதியவர்களில்  9 லட்சத்து 35 ஆயிரத்து 215 மாணவ, மாணவிகள் தேர்ச்சி  பெற்றனர். இது 89 சதவீதம் தேர்ச்சியாகும். இது கடந்த ஆண்டை விட 2.8 சதவீதம் கூடுதலாகும்.

498 மதிப்பெண்கள் பெற்று 9 மாணவிகள் முதலிடம் பெற்றனர். 497 மதிப்பெண்கள் பெற்று 52 மாணவ, மாணவியர் இரண்டாமிடம் பெற்றனர். 496 மதிப்பெண்கள் பெற்று 137 மாணவ, மாணவியர் மூன்றாமிடம் பெற்றனர்.

97.29 சதவீதம் தேர்ச்சி பெற்று கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்திலேயே முதலிடம் பெற்ற மாவட்டமாக விளங்குகிறது.

இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மட்டும் முதல் மூன்று இடங்களைப் 198 மாணவ, மாணவியர் பெற்றுள்ளனர்.

498 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பெற்ற 9 மாணவியர் விவரம்,

1. அனுஷா கொங்குவோளாளர் பள்ளி, பெருந்துறை
2. தீப்தி பஸ்கோஸ் மெட்ரிக் பள்ளி, மதுரை
3. காயத்ரி மான்ட் போர்ட் மெட்ரிக் பள்ளி, மஞ்சம்பட்டி, திருச்சி
4. மர்சியா ஷெரீன் மான்ட் போர்ட் மெட்ரிக் பள்ளி, மஞ்சம்பட்டி, திருச்சி
5.பொன் சிவசங்கரி இ.எச்.கே.என். பள்ளி, பாளையம், ஈரோடு
6. சாருமதி சிருஷ்டி மெட்ரிக் பள்ளி, பிரம்மபுரம், திருப்பத்தூர்
7. சோனியா எஸ்.ஜே.எஸ். ஜூப் மெட்ரிக் பள்ளி, திருநெல்வேலி
8. ஸ்ரீதுர்கா வீனஸ் மெட்ரிக் பள்ளி, சிதம்பரம்
9. வினுஷா ஆக்சிலியம் பள்ளி, வேலூர்

Read Previous

தென்னாப்பிரிக்காவில் மனோ, சித்ரா இசை நிகழ்ச்சி

Read Next

ரஜினிகாந்த் பற்றிய வதந்தி – விடிவி கணேஷ் மறுப்பு