ரஜினிகாந்த் பற்றிய வதந்தி இன்று இரவு திடீரென பரவியது. அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது என்பதுதான் அந்த வதந்தி.
இந்த வதந்தி வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர் விடிவி கணேஷின் டிவிட்டர் கணக்கிலிருந்து வெளிவந்தது.
உடனே, அனைத்து நிருபர்களும் சம்பந்தப்பட்டவர்களை விசாரிக்க ஆரம்பித்தனர்.
ஆனால், அது வதந்திதான் என்று தெரிந்ததும் நிம்மதியடைந்தனர்.
விடிவி கணேஷ் பெயரில் செயல்பட்டு வரும் போலி டிவிட்டர் கணக்கு அது என்பது தெரிய வந்தது.
இது தொடர்பாக விடிவி கணேஷ் கூறுகையில், “என்னுடைய பொய்யான டிவிட்டர் கணக்கை வைத்து அந்த செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. சைபர் கிரைமில் இது குறித்து புகார் தெரிவிக்க உள்ளேன். என்னுடைய பெயரை பயன்படுத்தி இந்த வதந்தி வெளியானது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது, ” என்றும் கூறினார்.
சற்று முன்னர் டிவிட்டரில் அந்த பொய்க் கணக்கைப் (@Ganesh_Jn) பார்த்ததில் அது உடனடியாக டிவிட்டரில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாகத் தெரிகிறது.
இம்மாதிரியான போலி கணக்குகளை உடனடியாக கண்டுபிடித்து நீக்க வேண்டும் . சம்பந்தப்பட்டவர்களும் டிவிட்டரில், பேஸ்புக்கில் இருக்கிறோமா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.