இளையராஜாவுடன் இணையவில்லை – மதன் கார்க்கி

madhan-karkyமிஷ்கின் இயக்கி வரும் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் இளையராஜா இசையில் வைரமுத்துவின் மகனான மதன் கார்க்கி பாடல் எழுதுகிறார் என நேற்று பல இணையதளங்களில் செய்தி வெளியானது. (நமது இணையதளத்தில் அல்ல).

ஆனால், இந்த செய்தியை மதன் கார்க்கி மறுத்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், “ நான் இளையராஜா அவர்களுடன் மிஷ்கின் இயக்கும் படத்தில் பாடல் எழுதுவதாக வந்த செய்தி உண்மையல்ல. ஆனால் அப்படி ஏதாவது நடந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்,” என்று கூறினார்.

மதன் கார்க்கி , யுவன்ஷங்கர் ராஜா இசையில் ‘பிரியாணி’ படத்தில்  பாடல் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

ஏ.ஆர். ரகுமானைப் புகழும் தயாரிப்பாளர்

Read Next

‘ஜில்லா’ ஷுட்டிங்கில் விஜய்…