‘ஜில்லா’ ஷுட்டிங்கில் விஜய்…

jillaசூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்க நேசன் இயக்கும் படம் ‘ஜில்லா’. நேற்று முதல் இப்படத்தின் படப்பிடிப்பில் விஜய்  கலந்து கொண்டு நடித்து வருகிறார்.

மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்திலும், விஜய் ஜோடியாக காஜல் அகர்வாலும் நடிக்கிறார்கள்.

விஜய் நடித்து வந்த ‘தலைவா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக் கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. பொதுவாக, விஜய் ஒரு படத்தின் ஷுட்டிங் முடிந்தவுடன்தான் அடுத்த படத்தில் நடிப்பது வழக்கம்.

அதே போல், ‘தலைவா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து, சில நாட்கள் ஓய்வுக்குப் பின் இப்போது ‘ஜில்லா’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.

அதற்குள்ளாகவே விஜய் அடுத்து நடிக்கப் போகும் படத்தைப் பற்றிய செய்திகள் றெக்கை கட்டி பறக்க ஆரம்பித்து விட்டன. மீண்டும் அவர், முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் என்றும், ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்றும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

யாருக்கு அந்த அதிர்ஷ்டம் என்பதைகப் பொறுத்திருந்து பார்ப்போம்…

Read Previous

இளையராஜாவுடன் இணையவில்லை – மதன் கார்க்கி

Read Next

சித்தியுடன் ஒன்று சேர்ந்தார் அஞ்சலி ?