ஆஸ்கர் பிலிம்ஸ் வி. ரவிச்சந்திரன் தயாரிப்பில் பரத்பாலா இயக்கத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில், தனுஷ், பார்வதி நடிக்கும் ‘மரியான்’ படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பால், ஏ.ஆர். ரகுமானை தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் வெகுவாக புகழ்ந்து கொண்டிருக்கிறார்.
“மரியான் படத்தின் இசை கடந்த சில வருடங்களாக தமிழ் திரை உலகம் பார்த்திருக்காத மாபெரும் இசையாகும். இந்த வெற்றிக்கு சொந்தக்காரர் A.R .ரஹ்மான் மட்டும் தான் . படத்தின் பின்னணி இசை கோர்ப்புக்காக இரவு பகலாக அயராது உழைத்து வருகிறார். தன்னுடைய வெளிநாட்டு இசை நிகழ்சிகளையும் ஒத்தி வைத்து , இதுதான் தன்னுடைய முதல் படம் போல் பாவித்து அவர் பணி புரிவதை பார்க்கும் போது பிரமிப்பு அடைந்தேன்.
வெறும் திறமை மட்டும் நம்மை உச்சத்தில் உட்கார வைக்காது அதற்குரிய உழைப்பும் தொழில் பக்தியும் வேண்டும் என்பதற்கு சிறந்த ஏ.ஆர். ரகுமான் தான் ,” என்கிறார் ஆஸ்கர் ரவிச்சந்திரன் .