‘அக்கினேனி’ குடும்பம் என்று தெலுங்குத் திரையுலகில் மூத்த நடிகர் நாகேஸ்வரராவ் குடும்பம் அழைக்கப்படுகிறது.
நாகேஸ்வரராவ், அவருடைய மகன் நாகார்ஜுனா, பேரன் நாக சைதன்யா மூவரும் ‘மனம்’ என்ற புதிய தெலுங்குப் படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.
விக்ரம் குமார் இயக்கும் இப்படத்திற்கு அனூப் ரூபன்ஸ் இசையமைக்கிறார்.
நாக சைதன்யா ஜோடியாக சமந்தாவும், நாகார்ஜுனா ஜோடியாக ஷ்ரேயாவும் நடிக்கிறார்கள்.
இப்படத்திற்கான எளிமையான பூஜை நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது.