இன்று எந்த படத்தைப் பற்றிய விளம்பரம் என்றாலும் அவற்றில் தவறாமல் இடம் பெறுவது ‘யு டியூப்’-ல் எங்கள் டிரைலரை இவ்வளவு பேர் பாத்திருக்கிறார்கள், எங்களது பாடலை இவ்வளவு பேர் பார்த்திருக்கிறார்கள் என்பதுதான்.
‘கொலை வெறி’ பாடல் யு டியூப்பில் பிரபலமான பின்தான் யு டியூப் என்ற ஒன்றை படத்தின் விளம்பரத்திற்காக எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை நமது தமிழ் சினிமாக்காரர்கள் கண்டு பிடித்தார்கள்.
ஆனால், அதற்கு முன்னதாகவே யு டியூப்-ல் பிரபலமானவர் ‘சாம் ஆன்டர்சன்’. ‘யாருக்கு யாரோ’ என்ற இவர் நடித்த படம் 2008ம் ஆண்டிலேயே யு டியூப்பில் வெளியிடப்பட்டு லட்சக்கணக்கான ‘ஹிட்’களை அள்ளியது.
அந்த யு டியூப் புகழ் ‘சாம் ஆண்டர்சனை’ மீண்டும் நடிக்க வைத்திருக்கிறார் வெங்கட் பிரபு. கார்த்தி, ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் ‘பிரியாணி’ படத்தில் சாம் ஆண்டர்சன் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அடுத்த பவர் ஸ்டாரா ?! …. பார்த்துங்க…இவர் கொஞ்சம் அப்பாவி மாதிரி இருக்காரு…..