தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

rain-imageதமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக ஓரிரு நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரி கூறினார்.

தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் ஆந்திராவில் தொடங்கியுள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனையொட்டி தமிழகத்திலும் கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டத்திலும் பருவமழை பெய்து வருகிறது.

இதுகுறித்து சென்னை ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது: வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 24 மணிநேரம் பெய்த மழையில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 6 சென்டிமீட்டரும், நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 2 சென்டி மீட்டரும் மழை பெய்துள்ளது.

சின்னகல்லார், வால்பாறை, பரங்கிப்பேட்டை, சேத்தியாதோப்பு, நடுவட்டம், குளித்துறை, தக்கலை, குளச்சல், மணிமுத்தாறு, வாலாஜா, தாமரைப்பாக்கம் ஆகிய இடங்களில் ஒரு சென்டி மீட்டரும் பதிவாகி உள்ளது.

தென்மேற்கு பருவ மழை கடலோர மற்றும் மலை மாவட்டங்கள் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் அடுத்த 24 மணிநேரத்தை பொறுத்தவரையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது,” என்றும் அவர் கூறினார்.

Read Previous

‘யு டியூப்’ புயல் ‘பிரியாணி’ படத்தில்…

Read Next

மூன்று ஹீரோயின்களில் ஒருவராக தமன்னா…