ரஜினிகாந்த் டார்ஜிலிங் பயணம்

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ நாளை வெளியாக உள்ள நிலையில் அவர் சென்னையில் இருந்து டார்ஜிலிங் சென்றிருக்கிறார்.

‘காலா’ படம் பற்றிய முதல் நாள் தகவல்களை அவர் அங்கிருந்துதான் கேட்டுத் தெரிந்து கொள்ளப் போகிறார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்தின் படப்பிடிப்பிற்காகத்தான் அவர் டார்ஜிலிங் சென்றிருக்கிறார் என்று ஒரு தகவல்.

ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யா இன்று காலை அப்படித்தான் ஒரு டிவீட் போட்டிருந்தார்.

ஆனால், அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் அதை மறுத்துவிட்டார்.

ரஜினிகாந்த் படப்பிடிப்பிற்காகத்தான் சென்றாரா, இல்லையா என்பது எப்படியும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

ரஜினிகாந்த் சென்னையிலிருந்து கொல்கத்தா சென்று அங்கிருந்து பக்டோக்ரா என்ற நகருக்குச் சென்றார் என அவர் சென்ற விமான நிறுவனமே டிவீட் போட்டுள்ளது. பக்டோக்ரா என்பது மேற்கு வங்க மாநிலம், சிலிகுரி மாநகருக்கு உட்பட்ட இடம். வெகு அருகாமையில் டார்ஜிலிங் உள்ளது.

https://twitter.com/flyspicejet/status/1004372114286174208

அங்கு பத்திரிகையாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், “கர்நாடகாவில் ‘காலா’ படத்தை வெளியிட தயாரிப்பாளர்கள் முயன்று கொண்டிருக்கிறார்கள். படம் நிச்சயம் வெளியாகும்,” என்று தெரிவித்தார்.

Read Previous

என் கிட்ட 1000 கோடி இருக்கு – சிம்பு ஓபன் பேச்சு

Read Next

‘காலா’- அமெரிக்க பிரிமீயர் வசூல் டார்கெட் என்ன ?

Most Popular