தமிழ்த் திரையுலகில் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் ஒரு நடிகர்களில் சிம்புவும் ஒருவர். விஜய், அஜித் ஆகியோருக்குப் பிறகு அவருக்கும் தமிழ்த் திரையுலகில் ஒரு முக்கிய இடம் கிடைக்கும் என்று பேச்சு இருந்தது.
ஆனால், படப்பிடிப்பிற்கு சரியாக வருவதில்லை, தயாரிப்பாளர்களுடன் தகராறு என அவரைப் பற்றிய சர்ச்சைகள்தான் அதிகமாக வந்து கொண்டேயிருந்தது.
இந்த நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் அனைவரும் வியக்கும் வகையில் படப்பிடிப்புக்கு குறித்த நேரத்திற்கு முன்னதாகவே சென்று படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.
‘செக்கச் சிவந்த வானம்’ படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்தடுத்து சில புதிய படங்களில் சிம்பு நடிக்க உள்ளார் என நேற்று தகவல் வெளியானது.
அந்த மகிழ்ச்சியில் நேற்று இரவு சிம்பு அவர் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பல விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.
“கடவுளோட ஆசீர்வாதத்தால எங்க அப்பா, அம்மா காசில்லாம, உங்களுடைய அன்பால நான் சம்பாதிச்சிருக்கேன். என்கிட்ட 1000 கோடி ரூபாய்க்கு மேல இருக்கும்க, ஓப்பனாவே சொல்றேன். எனக்கு வாழ்க்கையில எந்தப் பிரச்சினையும் இல்லை.
நான் ரொம்ப சந்தோஷமாவே இருக்கேன், அது மக்களுக்குப் புரியாது. நான் ரேபோட்டா இருக்க முடியாது. என்னால மத்தவங்க யாராவது கஷ்டப்படறாங்கன்னா, சுயநலவாதியா நான் இருக்க மாட்டேன். என் மேல தப்பு இருந்தால் நான் மாத்திக்கறேன்னு சொல்லியிருக்கேன், மாத்திக்கிட்டேன்.
19 வயசுல ‘மன்மதன்’ படம் எழுதும் போது எனக்கு மெச்சூரிட்டி கிடையாது. நான் தப்பு பண்ணால் திருத்திப்பேன், மன்னிப்பு கேட்பேன். நான் பண்ணாத தப்புக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன். உங்க கிட்டலாம் மனசு விட்டு பேசணும்னு தோணுச்சி, அதான் இந்த வீடியோவை பேசறேன்.
எம்ஜிஆர் மாதிரி ரஜினி சார் மாதிரி வரணும்கற ஆசை இருந்தது. ஆனால், அவங்களா மாற ஆசை இல்லை. அந்த மாதிரி ஆகணும்கற ஆசை இருந்ததாலதான் நான் இப்ப இப்படி வந்திருக்கேன். என்னை ரொம்ப டீமோடிவேட் பண்ணாங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஆசை இருக்கும். ஷேக்ஸ்பியர் மாதிரி வரணும், வைரமுத்து மாதிரி வரணும், மைக்கேல் ஜாக்சன் மாதிரி வரணும், கலைஞர் தாத்தா மாதிரி வரணும், சிஎம் மாதிரி வரணும்னு எல்லாருக்கும் ஒரு ஆசை இருக்கும்.
எல்லாரும் தப்பான ஒரு விஷயத்தைக் கொண்டு போய் சேர்க்கிறாங்க. தியாகராஜ பாகவதர் இருந்தாரு, எம்ஜிஆர் இருந்தாரு, ரஜினி சார் இருந்தாரு, ஒவ்வொரு கால கட்டங்கள்ல ஒருத்தர் இருந்தாங்க. ஆனால், ரஜினி மாதிரி யாரும் வரக் கூடாதுன்னு யாரும் சொல்லக் கூடாது.
இப்படி யார் தெரியுமா சொல்வாங்க, தான்தான் ரஜினின்னு நினைக்கிறவங்கதான் சொல்வாங்க. அப்படி பேசறவங்களுக்கு ஒண்ணு புரியலை. தியாகராஜ பாகவதர் மாறி வரணும்னு நினைச்சதால எம்ஜிஆர் வந்தாரு. எம்ஜிஆர் மாதிரி வரணும்னு நினைச்சதால ரஜினி வந்தாரு. ரஜினி மாதிரி வரணும்னு நினைச்சதால அஜித், விஜய் வந்திருக்காங்க. இவங்கள மாதிரி வரணும்னு நினைச்சதாலதான் நான் வந்திருக்கிறனான்னு தெரியலை. இருந்தும் எனக்கும் ஒரு இடம் கிடைச்சிருக்கு.
நான்தான் ரஜினின்னு நினைக்கிறவங்கதான் இதை மாதிரி பேசறாங்க. ஆனால், ரஜினி மாதிரி வரணும்னு நினைக்கிறன்னு நாம பேசும் போது அதை தப்பாவே வெளிய பேச வைக்கிறாங்க,” என மனம் திறந்து அந்த வீடியோவில் பல விஷயங்களைப் பற்றிப் பேசியிருக்கிறார் சிம்பு.