ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படம் அமெரிக்காவில் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகிறது.
நியுயார்க்கில் புகழ் பெற்ற ரீகல் தியேட்டரில் வெளியாகும் முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையை ‘காலா’ படம் பெற்றுள்ளது.
அமெரிக்க நேரப்படி ஜுன் 6ம் தேதி நண்பகல் 12 மணிக்கு அமெரிக்காவில் சுமார் 200 தியேட்டர்களில் ஆரம்பமாகியுள்ளது.
சுமார் 2,20,000 அமெரிக்க டாலர்கள் வரை இதுவரை பிரிமீயர் காட்சிகளுக்காக வசூலாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தொகை இன்னும் அதிகமாகவும் வாய்ப்புள்ளது. சுமார் 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் வரை போகும் என்கிறார்கள்.
முதல் வார இறுதி வசூலாக 30 லட்சம் அமெரிக்க டாலர்கள் வரை வசூலாகும் என படத்தை வெளியிடும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அப்படி வசூலித்தால் ‘கபாலி’ படத்தின் வசூலையும் ‘காலா’ படம் மிஞ்சும் என்கிறார்கள்.