‘மைனா’, ‘கும்கி’ படங்களின் இயக்குனர் பிரபு சாலமன் பெயரைச் சொல்லி யாரோ பணத்தைப் பிடுங்கும் ஏமாற்று வேலை செய்து வருகிறார்கள்.
அவருடைய பெயரைச் சொல்லி பிரபல சினிமா இயக்குனர்களிடமும் நடிகர்கள், நடிகைகளிடமும் “நான் பிரபு சாலமன் பேசுகிறேன் என் உறவினரின் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை நான் இரண்டு லட்சம் கொடுத்துள்ளேன், மீதி மருத்துவ செலவிற்காக உங்களால் முடிந்த பணத்தை கொடுத்து உதவுங்கள்” என்று சொல்லி லட்சக்கணக்கில் பணம் கேட்டுள்ளனர் . பணத்தை வங்கிக் கணக்கில் போடுங்கள் என்று கூறி ஏமாற்றி உள்ளனர். அதை நம்பி சில சினிமா பிரபலங்கள் அந்த வங்கிக்கணக்கில் பல லட்சம் பணம் போட்டுள்ளனர்.
இது சம்பந்தமாக பிரபு சாலமன் கூறுகையில், “என்பெயரை சொல்லி ஏமாற்றுகின்றனர் அதை யாரும் நம்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.அப்படி யாரவது கேட்டால் பணம் கொடுக்கவேண்டாம் என்று அன்புடன் கேட்டுகொள்கிறேன்.
இதுபோல் தயாரிப்பாளர் காஜா மொய்தீன் மற்றும் வேதம்புதிது கண்ணன் , நடிகர் சாந்தனு ஆகியோரின் பெயரைப் பயன்படுத்தி மோசடி செய்துள்ளனர். அதை செய்த நபர்தான் என் பெயரையும் பயன்படுத்தி மோசடி செய்திருப்பார் என்று எனக்கு சந்தேகம் உள்ளது.
இது சம்மந்தமாக மதுரவாயல் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளேன்,” என்று கூறினார்.