5 கோடி நகைகள் அணியும் அனுஷ்கா

anushkaனுஷ்கா தற்போது நடித்து வரும் தமிழ்- தெலுங்குப் படமான ‘ருத்ரம்மா தேவி’ படத்திற்காக 5 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை அணிந்து நடித்து வருகிறார்.

‘ஒக்கடு’ புகழ் (தமிழில் கில்லி) குணசேகரன் இயக்கும் இந்த படத்திற்காக 40 கோடி ரூபாய்க்கு  மேல் செலவழித்து படம் தயாரிப்பதாக சொல்லப்படுகிறது.

ஹிருத்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடித்த ‘ஜோதா அக்பர்’ படத்தில் காஸ்டியூம் டிசைனராக பணி புரிந்த நீதா லுல்லா ‘ருத்ரம்மா தேவி’ படத்திற்காக அனுஷ்கா அணியும் உடைகளையும், ஆபரணங்களையும் டிசைன் செய்திருக்கிறார்.

தங்கம், வைரம் ஆகியவையுடன் பிரம்மாண்டமாக, அழகாக உடைகளையும், ஆபரணங்களையும் ‘ராணி ருத்ரம்மா தேவி’ கதாபாத்திரத்திற்காக 5 கோடி ரூபாய் செலவில் உருவாக்கியிருக்கிறார்.

இது பற்றி இயக்குனர் குணசேகர் கூறுகையில், “ஜோதா அக்பர்’ படத்தில் ஐஸ்வர்யா ராய் அணிந்ததை விட இந்த படத்தில் அனுஷ்கா அணியும் ஆடைகளும்ம், ஆபரணங்களும் அதிகமாகப் பேசப்டும்,” என்கிறார்.

3டி யில் படமாக்கப்படும் முதல் சரித்திரப்படம் என்ற புகழைப் பெறும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். ராணா, பிரகாஷ் ராஜ், கிருஷ்ணம் ராஜு, பாபா ஷேகல் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

தோட்டாதரணி அரங்கம் அமைக்க, அஜய் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் 35 படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. டிசம்பருக்குள் மொத்த படப்பிடிப்பும் முடிவடைய உள்ளது.

தென்னிந்திய திரையுலகில் மட்டுமல்லாது, இந்தியத் திரையுலகில் பேசப்படும் விதத்தில் இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

Read Previous

ஹிந்திப் படம் இயக்கும் ஏ.ஆர். முருகதாஸ்

Read Next

தெலுங்குப் படத்தில் படு கிளாமராக நடிக்கும் எமி ஜாக்சன்

Most Popular