‘சிங்கம்’ சிங்கிளாத்தான் வரும்…

singam-2-paper-adசூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம் மற்றும் பலர் நடிப்பில், ஹரி இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள ‘சிங்கம் 2’ படம் மட்டுமே இன்று வெளியாகிறது.

உலகம் முழுவதும் ஏறக்குறைய 2400 திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படம், சென்னையில் மட்டும் 27 தியேட்டர்களிலும், புறநகர்ப் பகுதிகளில் 27 தியேட்டர்களிலும் வெளியாகியுள்ளது.

சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘2 D என்டர்டெயின்மென்ட்’ நிறுவனமும் இப்போது ‘சிங்கம் 2’ படத்தின் வெளியீட்டில் இணைந்துள்ளது.

கடந்த சில நாட்களாக வெளிவரும் பத்திரிகை விளம்பரங்களில் இந்த நிறுவனத்தின் பெயரையும் பார்க்கலாம்.

பல திரையரங்குகளில் காலை 8 மணிக்கே சிறப்புக் காட்சி நடைபெற்று வருகிறது.

2010ல் வெளிவந்த  ‘சிங்கம்’ படம் மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

‘சிங்கம் 2’ படமும் வெற்றியில் சீறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

இராம.நாராயணனின் ‘ஆர்யா சூர்யா’

Read Next

சிங்கம் 2 – விமர்சனம்