இராம.நாராயணனின் ‘ஆர்யா சூர்யா’

arya surya_00012ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் இராம.நாராயணன் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘ஆர்யா சூர்யா’.

இராம. நாராயணன் இயக்கத்தில் உருவாகும் 126வது படம் இது.

வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு நண்பர்கள் இருவர் சென்னைக்கு வருகின்றனர். முன்னேற துடித்த அந்த இரு இளைஞர்களின் வாழ்வில் அரசியலும் சினிமாவும் குறுக்கிடுகிறது. இந்த இரண்டில் அவர்கள் எதை தேர்ந்தெடுத்து முன்னேறினார்கள் என்பதை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் படமாக எடுத்திருக்கிறார்கள்.

விஷ்ணுபிரியன், சீனிவாசன், கங்கை அமரன், சித்ரா லட்சுமணன், கோவை சரளா, நட்சத்திரா, ருத்ஷா, நளினி, ஆர்த்தி கணேஷ், முமைத் கான் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்திற்காக டி. ராஜேந்தர், எல்.ஆர்.ஈஸ்வரியுடன்  பாடி , முமைத் கானுடன் சேர்ந்து நடித்துள்ள பாடல் ஒன்று 5 நாட்கள், 5 செட்கள், 25 நடன அழகிகளுடன் படமாக்கப்பட்டது. கருணாநிதி எழுதிய ‘முமைத் முமைத்…’ என்ற இந்த பாடல் கண்டிப்பாக ஆட்டம் போட வைக்குமாம்.

பிபறைசூடன், விவேகா, கானா பாலா ஆகியோரும் பாடல்கள் எழுத , ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

பிரேம்ஜி, காதல் கந்தாஸ், திருமால் முருகன் நடனப் பயிற்சி அளிக்க சூப்பர் சுப்பராயன் சண்டைப் பயிற்சி அளித்துள்ளார். ராஜ்கீர்த்தி படத்தொகுப்பையும், கே.எஸ். செல்வராஜ் ஒளிப்பதிவையும், புகழ்மணி வசனத்தையும், ஜே.துரை தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனித்துக் கொள்கிறார்கள்.

இரண்டு மாநிலங்களில் படமாக்கப்பட்டுள்ள ‘ஆர்யா சூர்யா’ விரைவில் வெளிவர உள்ளது.

Read Previous

உதயநிதி நடிக்கும் புதிய படம்…

Read Next

‘சிங்கம்’ சிங்கிளாத்தான் வரும்…