கவிஞர் வாலி முதன் முதலாக எழுதிய பாடல் ‘அழகர் மலைக் கள்வன்’ படத்தில் இடம் பெற்ற இந்த தாலாட்டுப் பாடல். இசையமைத்தவர் பி.கோபாலன், பாடலைப் பாடியவர் பி. சுசீலா. படம் வெளியான ஆண்டு 1959.
பாடல் வரிகள் இதோ…..
நிலவும் தாரையும் நீயம்மா
உலகம் ஒருநாள் உனதம்மா
பூங்காவிலே மலர்க் காதலே
நீங்காமலே இதழ் மீதிலே
தேன்துளியாய் நீ பிறந்தாய்
கனவும் நினைவும் இதுவா
மீன் போலவே விழி தாவுதே
நீ தூங்கவே குயில் கூவுதே
நேரமிதே ஆரமுதே
கனவும் நினைவும் இதுவா
பாடலை ஆடியோ வடிவில் கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
நன்றி – Inbaminge
