இன்று தனி ரிலீசாக ‘மரியான்’ படம் மட்டுமே வெளியாகிறது.
ஆஸ்கர் ரவிச்சந்திரன் அதிக பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்தை ‘வந்தே மாதரம்’ ஆல்பம் புகழ் பரத்பாலா இயக்கியிருக்கிறார். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார்.
தனுஷ், பார்வதி, அப்புக்குட்டி, உமா ரியாஸ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
தனுஷ் நடித்த டப்பிங் படமான ‘ராஞ்சனா’ படத்திற்கே விளம்பரங்கள் ரகளையாக இருந்தன.
ஆனால், நேரடி தமிழ்ப் படமான இந்த படத்திற்கு பெரிதாக விளம்பரங்கள் ஏதுமில்லை.
படத்திற்கு ஏற்கெனவே நிறைய செலவு செய்துவிட்டோம் என்று தயாரிப்பு நிறுவனம் நினைத்து விட்டது போலும்.
‘3’ படத்தின் தோல்விக்குப் பிறகு தனுஷிற்கு இந்த படமாவது வெற்றியைத் தருமா என்பது ஒரு சில நாட்களில் தெரிந்து விடும்…