சிம்பு – ஹன்சிகா காதல் அறிவிப்பு , காரணம் சிவகார்த்திகேயன் ?

simbu-hansikaமிழ் சினிமாவின் இன்றைய ஹாட் காதல் டாபிக்கே சிம்பு, ஹன்சிகா காதல்தான்.

இருவருக்குமிடையேயான காதல் திடீரென இருவரது அறிவிப்பபாலும் உறுதிப்படுத்தப்பட்டது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சினிமாவில் ஜோடி சேர்ந்து நடிப்பவர்கள் காதல் வயப்படுவதும், அது கல்யாணத்தில் முடிவது ஆண்டாண்டு காலமாக நடந்து வருவதுதான்.

ஆனால், சிம்பு விஷயத்தில் நயன்தாராவுடனான காதல், அவருக்கு இவரா என்ற பலரது பொறாமையாலேயே  முடிவுக்கு வந்ததாகச் சொல்லப்படுகிறது.

அதனால், இந்த காதலை சிம்புவும், ஹன்சிகாவும் வெகுநாட்களாக மறைத்து வைத்திருக்கிறாரகள். இருவரும் ‘வாலு’ படத்தில் இணைந்து நடிக்க ஆரம்பித்த கொஞ்ச நாட்களுக்கெல்லாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நெருங்கிப் பழகி காதலை வளர்த்திருக்கிறார்கள்.

அது இப்போது திடீரென ஏன் இருவர் மூலமாகவும் அறிக்கப்பட்டது என்பதுதான் பலருக்கு  புரியாத புதிராக இருந்தது. நாம் விசாரித்தவரையில் அதற்கு என்ன காரணம் என்பது தெரிய வந்தது.

“மான் கராத்தே’ என்ற படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹன்சிகா நடிக்க சம்மதித்ததே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஹன்சிகா விஜய், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வரும் போது திடீரென சிவகார்த்திகேயன் ஜோடியக நடிக்க சம்மதித்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

சிவகார்த்திகேயன் இப்போதுதான் இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார். முன்னணி ஹீரோவாகவும் ஆகவில்லை. அதற்குள் எப்படி ஹன்சிகா சம்மதித்தார் என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதற்குக் காரணம் ஹன்சிகாவின் அம்மாதானாம். அவர்தான் இந்த படத்தில் ஹன்சிகாவை நடிக்க வைத்தாராம்.

இதனால் சிம்பு கோபமடைந்திருக்கிறார். காரணம், சிவகார்த்திகேயன் , சிம்புவின் எதிர் முகாமான தனுஷ் முகாமைச் சேர்ந்தவர். தனுஷால் அறிமுகப்படுத்தப்பட்டு, தனுஷால் ஹீரோவாக்கப்பட்டவர். அது மட்டுமல்ல, சிவகார்த்திகேயன், தனுஷை அதிகம் ஃபாலோ செய்பவர். எந்த அளவுக்கு என்றால், தனுஷ் ஒரு விழாவுக்கு வேட்டி கட்டி வந்தால் சிவகார்த்திகேயனும் வேட்டி கட்டி வருவார். உதாரணம், சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ இசை வெளியீட்டு விழா.

இப்படி எதிர் முகாம் ஹீரோவுடன் ஹன்சிகா நடிக்க ஆரம்பித்ததால், சிம்புதான் ஹன்சிகாவிடம் சொல்லி அவர்களது காதலை வெளியிடச் சொன்னதாகச் சொல்கிறார்கள்.

இப்படி ஏதாவது நடக்கும் என்று தெரிந்துதான் ‘மான் கராத்தே’ குழுவினரும் திடீரென பேருக்கு நாலு பத்திரிகையாளர்களை அழைத்து ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்கள். அந்த படத்தில் ஹன்சிகாவை விட்டே அவர் அந்த படத்தில் நடிப்பதற்கான காரணத்தை சொல்ல வைத்தார்கள்.

ஏதோ ஒரு வேகத்தில் இருவரும் காதலை வெளிப்படுத்தினாலும், கை வசம் நிறைய படம் இருப்பதால் இன்னும் ஐந்து  வருடம் கழித்தே திருமணம் என்று சொல்லி வருகிறார்கள்.

காத்திருத்தலும் காதலில் சுகம்தானே…

Read Previous

இன்றைய ரிலீஸ்…

Read Next

சொன்னா புரியாது – விமர்சனம்