‘புறம்போக்கு’ டைட்டிலுக்கும் பிரச்சனை…

natraj-subramaniamடத்தோட கதையைக் கூட எழுதிடலாம் போல இருக்கு, ஆனால், ஒரு படத்துக்கு டைட்டில் வைக்கிறது இப்பலாம் ஒரு பிரச்சனையாவே வந்துடுது.

யு டிவி தயாரிப்பில், எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி நடிக்கும் படத்திற்கு ‘புறம்போக்கு’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது.

‘புறம்போக்கு’ என படத்தின் தலைப்பு வைத்திருப்பதற்காக தனியாக விளக்கம் வேறு கொடுத்தார் இயக்குனர் ஜனநாதன்.

‘புறம்போக்கு’ என்ற டைட்டிலை நான் முறைப்படி பதிவு செய்து வைத்திருக்கிறேன் என பிரபல ஹிந்திப்பட ஒளிப்பதிவாளரும், தமிழில், “நாளை, மிளகா” படங்களில் நாயகனாக நடித்தவருமான நட்ராஜ் தெரிவித்திருக்கிறார்.

எனவே, ‘புறம்போக்கு’ படத்தின் டைட்டிலை இயக்குனர் ஜனநாதன் மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார் நட்ராஜ் .

Read Previous

கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘என்னமோ ஏதோ’

Read Next

சினேகன் – சினேகா நடிக்கும் ‘இராஜராஜ சோழனின் போர்வாள் ’

Most Popular