கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘என்னமோ ஏதோ’

ennamo edhoவி பிரசாத் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரவி தியாகராஜன் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், ராகுல் ப்ரீத் சிங் நடிக்கும் படத்திற்கு ‘என்னமோ ஏதோ’ என பெயரிடப்பட்டுள்ளது.

தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற ‘அலா மொதலயிந்தி’ என் படத்தின் ரீமேக்தான் இந்த படம்.

பிரபு, நிகிஷா பட்டேல், அழகம் பெருமாள், மதன் பாப், மனோபாலா, அனுபமா குமார், சுரேகா வாணி, புதுமுகம் சுரேஷ் மற்றும் பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

இமான் இசையமைப்பில் மதன் கார்க்கி பாடல்களை எழுதுகிறார். இசையமைப்பாளர் அனிருத், ஸ்ருதி ஹாசன் இந்த படத்தில் பாடல்களை பாடியிருப்பது படத்தின் தனிச் சிறப்பு.

ஏற்கெனவே, இரண்டு கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. அடுத்த கட்டப் படப்பிடிப்பு ஆகஸ்ட் 14 முதல் ஆரம்பமாகி செப்டம்பர் 6 வரை ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

அதன் பின் இரண்டு பாடல் காட்சிகள் பாங்காங்கில் படமாக்கப்பட இருக்கிறது. அத்துடன் படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைகிறது.

படத்திற்கு ஒளிப்பதிவு கோபி ஜகதீஸ்வரன், எடிட்டிங் ஆலன், பி.ரவிகுமார்,  பி.வி. பிரசாத் படத்தைத் தயாரிக்கிறார்கள்.

Read Previous

ராணிகள் வராத ‘ராஜா ராணி’ இசை வெளியீடு…

Read Next

‘புறம்போக்கு’ டைட்டிலுக்கும் பிரச்சனை…

Most Popular