‘விக்கிரம சிம்மா’வாகும் கோச்சடையான்

kochadaiyanசௌந்தர்யா அஸ்வின் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடிக்கும் ‘கோச்சடையான்’ படம் தெலுங்கில் ‘விக்கிரம சிம்மா’ என்ற பெயரில் வெளியாக உள்ளது.

இதற்கான தெலுங்கு டப்பிங் பணிகள் சமீபத்தில் ஆரம்பமானது.

ரஜினிகாந்திற்கு தெலுங்குத் திரையுலகிலும் எண்ணற்ற ரசிகர்கள் இருக்கிறார்கள்.

‘மோஷன் கேப்சரிங்’ முறையில் தயாராகும் இப்படத்தில் சரத்குமார், ஆதி, ஷோபனா, ஜாக்கி ஷெராப், நாசர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

‘அவதார்’ படத்தில் பணிபுரிந்த பல தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்படத்திலும் பணி புரிகிறார்கள்.

படம் அநேகமாக தீபாவாளிக்குத் திரைக்கு வரும் எனத் தெரிகிறது.

Read Previous

‘ராஜா ராணி’யின் புதிய சாதனை…

Read Next

அம்மாவாக நடிக்கும் மீனா…

Most Popular