ரஜினிகாந்த் நடித்த ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் சிறுமியாக நடித்து அனைவரது மனதையும் கவர்ந்தவர் மீனா.
பின்னர் கதாநாயகியாக உயர்ந்து ரஜினிகாந்துடனே ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து கமல்ஹாசன், சரத்குமார், கார்த்திக், விஜயகாந்த், அர்ஜுன் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் தமிழிலும், தெலுங்கில் சிரஞ்சீவி, நாகார்ஜுனா போன்ற நடிகர்களுடனும், மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி போன்ற நடிகர்களுடனும், கன்னடத்திலும் நடித்து தென்னிந்திய நடிகையாக வெற்றிகரமாக வலம் வந்தார்.
திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பின் திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்த மீனா, மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.
தற்போது, மலையாளத்தில் இரு படங்களில் அம்மாவாக நடிக்கிறார்.
‘பால்ய கால சகி’ என்ற படத்தில் மம்முட்டியின் அம்மாவாகவும், மோகன்லால் நடிக்கும் ‘திரிஷ்ஷயம்’ என்ற படத்தில் இரண்டு குழந்தைகளின் அம்மாவாகவும் நடித்து வருகிறார்.
ஆஹா….தமிழ்லயும் அம்மாவா நடிக்க அழைப்பாங்களே…