மீண்டும் வருகிறார் ஜீவன்..

actor jeevanயார் ஜீவன் ? என யோசிக்கும் மக்களுக்கு ஒரு ரீவைன்ட்.

‘காக்க காக்க’ படத்தில் சூர்யாவை மிரட்டிய வில்லன், ‘நான் அவனில்லை’ படத்தில் பெண்களை காதலித்து கல்யாணம் செய்து ஏமாற்றிய ஹீரோ, ‘திருட்டுப் பயலே’ படத்தில் பணத்துக்காக பிளாக் மெயில் செய்யும் கதாபாத்திரம், இப்படி வெரைட்டியாக நடித்தவர்தான் ஜீவன்.

திடீரென படங்களில் நடிக்காமல் காணாமல் போய்விட்டார்.

எங்கே போனீர்கள் என்று கேட்டதற்கு ஜீவன் அளித்த பதில்,

“கிருஷ்ணா லீலை’  முடிந்து ரிலீஸுக்கு தயாரானது சில காரணங்களால் தடை பட்டு போனது அது ரிலீஸாகி  இருந்தால் இந்த இடைவெளி தெரியாமல் போயிருக்கும் ..

அதோடு நான் கலையுலகில் பயணித்த காலம் வேண்டுமானால் அதிகமாக இருக்கலாம் ஆனால் நடித்த படங்கள் குறைவுதான் அதனால் இந்த இடைவெளி எனக்கு பெரிதாக தெரியவில்லை

இதையெல்லாம் விட சமீபத்தில் தான் என் அப்பா இறந்தார்.எங்களுக்கு இருக்கிற வியாபாரங்களை ஒழுங்கு படுத்த வேண்டிய பொறுப்பில் நான் இறங்கியதால் இந்த இடைவெளி.

நல்ல கதைகளையும் ,கதாபாத்திரங்களையும் வேட்டையாடி என்னை நான் நிலை நிறுத்திக் கொள்வேன். முதலில் செல்வா இயக்கும் படத்திற்கு நல்ல டைட்டிலை வேட்டையாடி கொண்டிருக்கிறோம் விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக  உள்ளது ,” என்கிறார் ஜீவன்.

Read Previous

விஷால் பற்றி வதந்தி வேண்டாம் – வரலட்சுமி வேண்டுகோள்

Read Next

தீபாவளிக்கு ‘இரண்டாம் உலகம்’

Most Popular