‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்திற்குப் பிறகு சுந்தர் .சி இயக்கும் ‘அரண்மனை’ படத்தில் ஹன்சிகா கதாநாயகியாக நடிக்கிறார்.
இப்படத்தில் லட்சுமி ராய், ஆன்ட்ரியா ஆகியோரும் மற்ற கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.
இப்படத்தில் ஹீரோவாக ஆர்யா நடிப்பார் என்று சொல்லப்பட்டது, ஆனால், இப்போது அந்த கதாபாத்திரத்தில் வினய் நடிக்கிறார். மற்றும் சந்தானம், நிதின் சத்யா, கோவைசரளா, மனோபாலா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன் இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் ஆரம்பமானது.
இந்த படம் நகைச்சுவை கலந்த த்ரில்லர் படமாக இருக்குமாம்….