சுனைனா….இனி…அனுஷா..

sunaina-0910‘காதலில் விழுந்தேன்’ படம் மூலம் பாப்புலரான சுனைனா , தொடர்ந்து ‘வம்சம்’, ‘நீர் பறவை’ போன்ற படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து நல்ல நடிகை என்ற பெயரை வாங்கினார்.

இருந்தாலும், தமிழின் முன்னணி நடிகைகளில் அவருடைய பெயர் வராமலே போனது.

இதனால், அவருடைய பெயரும் இனி இடம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அவருடைய பெயரை ‘அனுஷா’ என்று மாற்றி விட்டாராம்.

ஏன் இந்த பெயர் மாற்றம் என்று கேட்டதற்கு….

“இது முற்றிலும் எனது பெற்றோருடைய முடிவு. சிறு வயதிலேயே ஜோதிடர் சொன்ன எழுத்தில் எனது பெயரை வைக்க முடிவு செய்திருந்தனர். ஆனால், அப்போது அதன்படி வைக்காமல் எனக்கு சுனைனா என்று பெயர் வைத்தனர்.

இப்போது, மீண்டும் ஜோதிடரை சென்று பார்த்த போது,  எனக்குப் பொருத்தமான எழுத்தில் பெயர் வைத்தால் நல்லது என்று சொன்னார்கள். அதனால் எனது பெயரை ‘அனுஷா’ என மாற்றியிருக்கிறார்கள். பெயரில் என்ன இருக்கிறது…எனது நிஜ கேரக்டர் எப்போதும் அப்படியேதான் இருக்கும்…இருந்தாலும் எனது புதிய பெயர் எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது, ” என்றார்.

இப்போது நடித்து வரும் ‘நம்பியார்’ படத்திலிருந்து அனுஷா என்றுதான் அழைக்கப்படப் போகிறார் சுனைனா…

 

Read Previous

நஸ்ரியா விளம்பரத்திற்காக செய்கிறார் – இயக்குனர் சற்குணம் குற்றச்சாட்டு

Read Next

கார்த்தி தேறி விட்டார் – காஜல் சர்டிபிகேட்…