நஸ்ரியா விளம்பரத்திற்காக செய்கிறார் – இயக்குனர் சற்குணம் குற்றச்சாட்டு

naiyandi gallery_00015‘நய்யாண்டி’ படத்தில் ஒரு பாடல் காட்சியில் தனக்கு பதிலாக வேறு ஒருவரை நடிக்க வைத்து , அதில் நான் கிளாமராக நடித்திருப்பது போல படமாக்கியிருக்கிறார்கள் என நஸ்ரியா குற்றம் சாட்டினார்.

அதற்கு பதிலளித்திருக்கும் இயக்குனர் சற்குணம் கூறியுள்ளதாவது,

“படத்தை எடிட்டிங் பண்ணும் போது ஒரு காட்சியில் அக்காட்சியின் ‘கன்டென்ட்’ பார்வையாளர்களை சென்றடைய ஒரு க்ளோஸ் அப் ஷாட் அவசியப்பட்டது.

நஸ்ரியாவிடம் ஒரு க்ளோஸ் அப் மட்டும் வந்து நடித்துக் கொடுத்து விட்டு போ என்று சொன்னேன்.

இதற்காக நான் கேரளாவில் இருந்து வரமுடியாது. வேறு யாரையாவது வைத்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்ன நஸ்ரியாவிற்கு இப்ப என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. ஒரு வேளை தன்னுடைய மார்க்கெட்டிங் பப்ளிசிட்டிக்காக கூட இப்படி செய்திருக்கலாம்.

ஒரு வேளை நஸ்ரியாவிற்கு டிரைலரில் வரும் அந்த ஒரு க்ளோஸ்அப் ஷாட் உறுத்தலாக இருந்தால், அதை நான் நீக்கவும் தயார். ஆனால், ‘இனிக்க இனிக்க…’ பாடல் காட்சியில் நான் நடிக்கவில்லை என்று சொன்ன நஸ்ரியா, மீடியா நண்பர்களோடு அமர்ந்து படம் பார்த்து நானில்லை டூப் என்று சொல்ல தயாரா ?

இந்த படத்திற்கு அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய ‘யு’ சர்டிபிகேட் கிடைத்துள்ளது என்பதை இந்த நேரத்தில் உங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன், ” என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

‘ராஜா ராணி’ படத்தின் இசை வெளியீட்டின் போதும் அந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ்,  நஸ்ரியா மீது படப்பிடிப்புக்கு ஒழுங்காக வருவதில்லை என குற்றம் சாட்டியிருந்தார்.

‘ராஜா ராணி’ படத்தின் எந்த ஒரு பிரமோஷன் நிகழ்ச்சியிலும் நஸ்ரியா கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வளர்ந்து வரும் நேரத்தில் தன்னைப் பற்றிய தவறான பேச்சுக்களை சரி செய்யும் விதத்தில் தனுஷுடன் சேர்ந்து நடித்துள்ள ‘நய்யாண்டி’ படத்தின் மூலம் ஏதாவது ஒரு பரபரப்பை ஏற்படுத்தி தனது பெயரை சரி செய்ய நஸ்ரியா முயல்கிறார் என திரையுலக நோக்கர்கள் கருதுகிறார்கள்.

 

 

Read Previous

‘ஜில்லா’ – கேரளா உரிமையை வாங்கிய மோகன்லால்

Read Next

சுனைனா….இனி…அனுஷா..