‘நான் மகான் அல்ல’ படத்தில் இணைந்து நடித்த ஜோடியான கார்த்தி – காஜல் அகர்வால், மீண்டும் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள்.
அந்த படத்திலேயே இருவரது காதல் காட்சிகளும் சுவாரசியமாக இருந்தன. இந்த படத்தில் மேலும் சுவாசியமான காட்சிகளை அமைத்திருக்கிறாராம் இயக்குனர் ராஜேஷ்.
கார்த்தியைப் பற்றி காஜல் கூறும் போது,
‘நான் மகான் அல்ல’ படத்தில் ஒன்றாக நடித்தது எங்களுக்குள் நல்ல புரிதலை ஏற்படுத்தியிருந்தது. அது ‘அழகுராஜா’ படம் ஆரம்பிக்கும் போது உதவியாக இருந்தது. ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு நடிப்பதற்கும் காரணமாக அமைந்தது.
கார்த்தியின் நடிப்பில் அதிகமான பாசிட்டிவ் எனர்ஜியை பார்க்க முடிகிறது. முன்பை விட இப்போது அவருடைய நடிப்பில் நிறையவே மாற்றங்களை பார்க்க முடிகிறது. அவர் நடிப்பில் நன்றாக தேறி விட்டார், ” என்று கூறுகிறார் காஜல்.