‘பீட்சா’ படத்தின் கதாநாயகியான ரம்யா நம்பீசன் விஷால், லட்சுமி மேனன் நடிக்கும் ‘பாண்டிய நாடு’ படத்தில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.
இமான் இசையில் மதன் கார்க்கி எழுதியுள்ள ‘ஃபை ஃபை ஃபை கலாச்சி ஃபை….’ என்ற அந்த பாடலை வித்தியாசமாக பாடியிருக்கிறார் ரம்யா.
அவருடைய குரலும் இனிமையாக உள்ளது. இதன் மூலம் பாடகியாகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார் ரம்யா.
இன்றைய கதாநாயகிகள் பலர் தமிழில் பேசவே திக்கித் திணறும் காலத்தில் மலையாள நடிகையான ரம்யா அழகாகப் பாடியிருப்பது நிச்சயம் வரவேற்பைப் பெறும்.
‘பாண்டிய நாடு’ படத்தின் இசை வெளியீடு இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது.