நய்யாண்டி – நஸ்ரியா பிரச்சனை முடிவுக்கு வந்தது…

naiyandi gallery_00001‘நய்யாண்டி’ படக்காட்சி சம்பந்தமாக மாறி மாறி புகார் கூறிக் கொண்ட நஸ்ரியா, இயக்குனர் சற்குணம் இருவரும் சமாதானம் ஆகி விட்டார்களாம்.

இன்று காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரிவியூ திரையரங்கில் நஸ்ரியா, அவருடைய அப்பா, வக்கீல்கள் படத்தைப் பார்த்திருக்கிறார்கள்.

‘தனக்குப் பதிலாக வேறொருவர் நடித்த அந்த ‘தொப்புள்’ காட்சி கூட ஆபாசமாக இல்லை ’ என்று நஸ்ரியா தரப்பில் சொல்லப்பட்டதாம்.

இருந்தாலும் அந்த காட்சியை நீக்க இயக்குனர் சற்குணம் சம்மதித்து விட்டாராம்.

படம் நன்றாக இருப்பதால் தனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என நம்பும் நஸ்ரியா, காவல்துறையிடம் அளித்த புகாரையும் வாபஸ் பெற முடிவு செய்து, இயக்குனரிடமும் மன்னிப்பு கேட்டாராம்.

இது சம்பந்தமாக, இன்று இரவே பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் நஸ்ரியா…

ஸோ….நஸ்ரியாவின் நய்யாண்டி…இத்துடன் முடிவுக்கு வந்தது….

Read Previous

‘பாண்டிய நாடு’ – பாடகியான ரம்யா நம்பீசன்…

Read Next

‘ராஜா ராணி’ பார்ட்டியில் நயன்தாரா, சிம்பு