விளையாட்டுத் துறைக்கு உதவி செய்வேன் – ஜெயம் ரவி

jayam ravi_00001‘ஜெயம்’ ரவிக்கும் விளையாட்டு வீரர் கதாபாத்திரத்திற்கும் நிறையவே ஒன்றுமை உண்டு.

‘தாஸ்’ படத்தில் கால்பந்தாட்ட வீரராகவும், எம்.குமரன் S/0.மகாலட்சுமி’ படத்தில் குத்துச் சண்டை வீரராகவும், தற்போது கல்யாண் இயக்கத்தில் நடித்து வரும் ‘பூலோகம்’ படத்தில் மீண்டும் குத்துச்சண்டை வீரராகவும் நடித்து வருகிறார்.

இதைப் பற்றி ஜெயம் ரவி கூறுகையில்,

எனக்கு சிறு வயதில் இருந்தே விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் அதிகம் .அந்த ஆர்வம் என்னுள் தணியாத ஊக்கத்தையும் , ஒழுக்கத்தையும் கற்று தந்தது என்றால் மிகை ஆகாது . நான் என்னுள் ஒரு விளையாட்டு வீரன் இருப்பதை உணருகிறேன் .

ஒரு விளையாட்டு வீரனுடைய மன நிலையில் தான் நான் வெற்றி தோல்வி இரண்டையும் எதிர் கொள்கிறேன் .இந்த பக்குவத்துக்கு என்னுடைய விளையாட்டு ஆர்வம் மிகவும் உதவியது . விளையாட்டு துறைக்காகவும் , விளையாட்டு போட்டியாளர்களை ஊக்குவிக்கவும் என்னுடைய  கணிசமான நேரத்தையும் , சக்தியையும்  செலவிட இருக்கிறேன் .

எனக்கு பெரும்பாலான படங்களில் விளையாட்டு வீரனாக பாத்திரம் அமைவது திட்டமிட பட்டது அல்ல. நான் எனக்கு சவாலான எந்த பாத்திரத்தையும் ஏற்று நடிக்க தயாராகவே உள்ளேன் .

தற்போது நடித்து வரும் சமுத்திர கனியின் இயக்கத்தில் உருவாகும்  ‘நிமிர்ந்து நில்’ மற்றும் கல்யான் இயக்கத்தில் உருவாகும் ‘ பூலோகம் ‘ ஆகிய இரு படங்களிலும் எனக்கு சவாலான பாத்திரங்களே .அவை ரசிகர்களை நிச்சயம் கவரும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை,” என்கிறார் ஜெயம் ரவி.

Read Previous

விஷ்ணு விஷால் நடிக்கும் 5 படங்கள்…

Read Next

கொஞ்சம் ரெஸ்ட் எடும்மா…ஸ்ருதிக்கு அம்மா அட்வைஸ்…

Most Popular