மலையாளத்தில் வில்லனாகவும் நடிப்பேன் – கார்த்தி

karthi-in-trivandrumது என்னமோ தெரியலை…மலையாளப் படங்கள் மேல நம்ம நட்சத்திரங்களுக்கு ஒரு தனி பாசம், ஆசை…

கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் நடிகை சமந்தா , மலையாளப் படங்கள்லயும் நடிக்க முடிவெடுத்திருக்கிறேன்னு சொன்னாங்க.

இப்ப கார்த்தியோட ‘டேர்ன்’.

‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தை கேரளாவிலும் விளம்பரப்படுத்த நேற்று திருவனந்தபுரம், ஸ்ரீகுமார் திரையரங்கில் இப்படத்தின் டிரைலர் வெளியீடு நடைபெற்றது.

அப்போது பேசிய கார்த்தி, “மலையாளப் படங்களில் நல்ல கதை கிடைத்தால் வில்லனாகவும் நடிக்க தயாராக உள்ளேன். திரைலகில் இயக்குனராகத்தான் வரவேண்டும் என்ற ஆசையில் இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவியாளராகச் சேர்ந்தேன்.

இயக்குனர்களின் வேலை என்பது எவ்வளவு கஷ்டம் என்பதை உணர்ந்தேன். நல்ல திரைக்கதை எழுத்தாளர்களால் மட்டுமே இயக்குனராக வர முடியும்,” என்றார்.

Read Previous

‘சுட்ட கதை’ – 24ம் தேதி ரிலீஸ்…

Read Next

கௌதம் மேனன் படத்தில் நடிப்பேன் – சூர்யா அதிரடி அறிவிப்பு

Most Popular